Thank you for your Support on Eid Gathering 2015

எமது யாழ் முஸ்லிம் மக்களின் ஒன்று கூடல் மிகவும் சிறப்பாக நடந்தேறியது.
உற்சாகமும், மகிழ்ச்சியும், கரைபுரண்டோடும், ஒரு அற்புதமான நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் வாய்ப்பினை, தொடர்ந்து பல வருடங்களாக எமக்கு வழங்கிக் கொண்டிருக்கும் இறைவனுக்கு நன்றிகள்!

இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்த அன்பு உறவுகளுக்கும் எமது நன்றிகளும், வாழ்த்துக்களும்!
இங்கு புதிதாக வந்து குடியெறிய யாழ் சமுகமக்கள், ஆர்வத்தோடு கலந்து கொண்டு எமது நிகழ்ச்சிக்கு பொலிவும் வலிவும் சேர்த்தனர், அவர்களை வரவேற்று அரவணைத்துக் கொண்டோம். இலங்கையின் பல பாகங்களையும் சேர்ந்த அன்பு உள்ளங்கள் பலரும் கலந்து கொண்டு ஆதரவு தந்திருந்தனர். அவர்களையும் வரவேற்று உள்வாங்கிக் கொண்டோம்.

இந்த நிகழ்ச்சியின் ஜீவன் நிச்சயமாக எமது குழந்தைகள்!
அவர்களது பங்களிப்பு அளப்பரியது, திருப்தியின் உச்சத்தில் எம்மை திக்குமுக்காட வைத்தது.
எமது பிள்ளைகள் எதிர்கால நம்பிக்கைகளின் ஆதாரங்கள்!
ஒவ்வொரு வருடமும் எமது பிள்ளைகளால் எமது நம்பிக்கைகள் பலம் பெருகின்றன. எமது சமூகதின் எதிர்காலத்தை, எமது பிள்ளைகள், நிச்சயம் வளப்படுத்துவார்கள்!
என்ற திருப்தி ஏற்படுகிறது. இன்ஸா அல்லாஹ்!

நிகழ்ச்சி சிறப்புற நடக்க பல உறவுகள் திரைமறைவில் கடினமாக உழைத்திருந்தனர். அவர்கள் நேற்று மட்டுமல்ல எமது ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பல ஆண்டுகளாக முதுகெலும்பாக இருந்து உழைக்கிறார்கள்! அவர்களை எங்கள் மனங்களில் நிறுத்திக் கொள்கிறோம்.
இம்முறை நிகழ்ச்சியில் பங்குபற்ற வாய்ப்புக் கிடைக்காதவர்களும் அடுத்த வருட நிகழ்ச்சியில் நிச்சயம் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

இந்த எதிர்பார்ப்பில் எமது நிகழ்ச்சியை இன்னும் விரிவுபடுத்த விழைகிறோம். நிச்சயம் இறைவன் உதவிசெய்வான்! எமது சமூகமக்களாகிய நீங்களும் ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகிறோம்!