JMA UK Disabled Project 2025 – Puttalam

Event Report
Disability Project 2025 – Distribution of Assistance
Date: Monday, May 12, 2025
Time: 10:00 AM – 12:30 PM
Venue: Muslim Cultural Hall, Masjid Road, Puttalam


On Monday, May 12, 2025, from 10:00 AM to 12:30 PM, the annual assistance packages for persons with disabilities under the Disability Project 2025 were respectfully distributed at the Muslim Cultural Hall, located on Masjid Road in Puttalam.

After successfully conducting similar programs in Negombo and Jaffna regions, the JMA – UK organization organized this final phase in Puttalam, a city with a significant Muslim population from Jaffna.

More than 57 families from areas including Puttalam, Thillaiyadi, Rathmalay, Madurankuli, and Alankudaparticipated. The program honored recipients with donations valued at approximately Rs. 2,000,000.00.

Chief Guests and Special Invitees:

  • Moulavi Malik

  • Mr. Fadheen (Chairman)

  • Mr. Rameez (Councillor)

  • Mr. Basil (Engineer)

  • Mr. Saibudeen

  • Mr. Kabeer (Lawyer)

  • Mr. Samoon (Engineer – Pasan)

  • Mr. Riyaz (District Secretariat)

  • Mr. Kabeer (Retired Teacher)

  • Mr. Fairoos

  • Mr. Aslam

Additionally, several social activists such as Hammashi, Muzeebur, Murad Mansoor, and Ameer Ali, along with many other well-wishers totaling over 100 attendees, took part in the event. They shared heartfelt greetings and prayers, greatly enriching the occasion.

This meaningful and impactful event was meticulously organized and beautifully executed through the dedication of the following volunteers:

  • Mr. Fahmi – Finance Lead

  • Mr. Abdullah – Event Coordinator

  • Mr. Ruminas – General Assistance

  • Mr. Kansoor – Refreshment Arrangements

And from the women’s team:

  • Ms. Rashida

  • Ms. Wahida

  • Ms. Safnas Fahmi

  • Ms. Aqeela Saheed

Their tireless efforts and sincere dedication made this noble event a true success. May the Almighty accept their service and reward them abundantly.

The event commenced at 10:00 AM with a beautiful recitation by Fathima Abdullah, and came to a joyful conclusion with a light refreshment gathering.

As the program drew to a close, Mr. Sawjeer Salman, the General Secretary of JMA, who traveled from the UK to Sri Lanka, delivered the vote of thanks. All attendees expressed their appreciation to the JMA Organization and reaffirmed their continued support.

– JMA Team

கடந்த 12/05/2025 திங்கள்கிழமை காலை 10:00 மணியிலிருந்து மதியம் 12:30 pm மணி வரையில் புத்தளம் மஸ்ஜித் வீதியில் இயங்கி வரும் முஸ்லிம் கலாச்சார மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான (disability Project – 2025) இவ்வருடத்திற்கான உதவித்தொகைகள் கண்ணியமான முறையில் வழங்கப்பட்டது. ஏற்கனவே நீர்கொழும்பு மற்றும் யாழ்ப்பாணப் பிரதேசங்களில் வெற்றிகரமாக மாற்றுத் திறனாளிகளுக்கான கொடுப்பனவுகளை பகிர்ந்தளித்திருந்த JMA – Uk நிறுவனம் இறுதியாக இவ்வேற்பட்டை யாழ் முஸ்லிம்கள் செறிந்து வாழும் புத்தளம் நகரில் ஒழுங்கு படுத்தியிருந்தது. இந்நிகழ்வில் புத்தளம், தில்லையடி, ரத்மலாய, மதுரங்குளி மற்றும் ஆலங்குடா உட்பட பல பிரதேசங்களை சேர்ந்த 57க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிறார்கள், பெரியவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சுமார் 20,000,00.ரூபாக்கள் பெறுமதியான அன்பளிப்புக்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்த விலைமதிப்பற்ற அருமையான நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக மலீக் மெளலவி, ப(f)தீன் சேர், றமீஸ் சேர் (கவுன்சிலர்), பாஸில் (பொறியாளர்), ஸைபுதீன் சேர், கபீன் (வழக்கறிஞர்), சமுன் (பொறியாளர் – பாசானம்), றியாஸ் (கச்சேரி) கபீர் சேர் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) பைரூஸ் சேர், அஸ்லம் சேர் உட்பட சமூக ஆர்வலர்களான ஹம்மாஷி, முஜீபர், முராத் மன்ஸூர், அமீர் அலி இவர்களுடன் இன்னும் பல நலன் விரும்பிகள் உட்பட 100க்கும் மேற்பட்ட நல்லுள்ளங்கள் கலந்து சிறப்பித்து வாழ்த்துக்களையும் துஆக்களையும் வாரி வழங்கினார்கள்.

இப்பாரிய நிகழ்வை செவ்வனே நெறியமைத்து அழகாக நடாத்திட அரும்பாடுபட்ட சகோதரர்களான பஹ்மி (நிதிப்பொறுப்பு), அப்துல்லாஹ் (ஒருங்கமைப்பு), ரூமினாஸ் (பொதுவான உதவிகள்), கன்ஸூர் (சிற்றுண்டி ஏற்பாடுகள்) எனவும் சகோதரிகளான ராஷிதா, வாஹிதா, சப்(f)னாஸ் பஹ்மி, அகீலா சஹீத் எனவும் தமது சிரமங்களையும் பாராமல் இப்புனித நிகழ்வை சிறப்பாக்கியிருந்தார்கள். இவர்களது சேவைகளை/ அர்ப்பணிப்புகளை வல்லநாயன் பொருந்திக் கொள்வானாக.!

திங்களன்று காலை 10:00 மணியளவில் பாத்திமா அப்துல்லாஹ்வின் கிராஅத்துடன் ஆரம்பித்த இந்நிகழ்ச்சி சந்தோஷகரமாக ஒரு சிறிய சிற்றுண்டி வைபவத்துடன் இறுதிக்கு கொண்டுவரப்பட்டது. நிகழ்வினது நிறைவாக பிரித்தானியாவிலிருந்து இலங்கை சென்றிருந்த எமது அமைப்பினது பிரதான செயலாளர் சவ்ஜீர் சல்மான் அவர்களின் நன்றியுரையைத் தொடர்ந்து கலந்து கொண்டிருந்த அனைவரும் JMA அமைப்பினரை வாழ்த்தியதோடு தமது பேராதரவையும் தெரிவித்தனர்.

JMA Team