JMA-UK AGM April 2026

யாழ் முஸ்லிம்-UK சொந்தங்கள் அனைவருக்கும்,
அஸ்ஸலாமு அலைக்கும்!

சென்ற 01/02/26 இல், Election மற்றும் AGM தொடர்பான தகவல்களை மக்களுக்கு அறியத் தந்திருந்தோம். அதனடிப்படையில் இன்ஷா அல்லாஹ், எதிர்வரும்
26/April/2026 அன்று நமது சமூகக் கட்டமைப்பான JMA-UK இனது AGM உம் புதிய நிர்வாகக்குழு தெரிவும் பதவியேற்பும், நடைபெற இருக்கிறது.
இடம்:- Harrow SLMCC
நேரம்:- அறியத்தரப்படும்.

அடுத்து வரும் மூன்று வருடங்களுக்கு JMA-UK ஐ வழி நடாத்தவும், அதன் மூலம் ஏராளமான மக்கள் நலப் பணிகளை முன்னின்று செயற்படுத்தவும், அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை பெற்றுக் கொள்ளவும் முன்வருமாறு மீண்டும் மீண்டும் பாசத்தோடும் உரிமையோடும் உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்.

நிர்வாகிகளாக செயற்பட விரும்புவோர் உங்களுடைய விருப்பத்தை Br Shameez ( 07894533396) அவர்களைத் தொடர்பு கொண்டு(Deadline 19th April 2026) அறியத்தருமாறு வேண்டப்படுகிறீர்கள்.

மேலும், நமது சமூகத்தைச் சேர்ந்த சகல ஆண் சகோதரர்களையும் AGM இல் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம்.

AGM இல் விருந்து உபசார ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது. வீண்விரயங்களையும் தட்டுப்பாடுகளையும் தவிர்க்க, கலந்து கொள்ளும் சகோதரர்களிடமிருந்து முன்பதிவுகளை வேண்டி நிற்கிறோம்.

Please register your attendance by 19th of April 2026.

JMA-UK