. அவசர நிதி கோரல்
அஸ்ஸலாமு அலைக்கும்.
தற்சமயம் தாய்நாட்டில் பெய்து கொண்டிருக்கும் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப்பெருக்கின் காரணமாக புத்தளம் மற்றும் அதனை சூழ்ந்துள்ள பல பிரதேசங்களை சேர்ந்த ஏராளமான ஏழைக்குடும்பத்தினர் பாரிய சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இதன் நிமித்தம் JAFFNA MUSLIM ASSOCIATION – UK ஆரம்ப கட்டமாக அத்தியாவசிய நிவாரண உதவிகளை முன்னெடுத்துச்செல்ல உங்களது மனிதாபிமான உதவிகளை அவசரமாக நாடி நிற்கின்றோம். ஆகவே கருணையுள்ளம் கொண்ட எம்மதிப்புக்குரிய இரத்த உறவுகளே, கடும்மழையினாலும், வெள்ளத்தாலும் இன்னலுற்ற நம் சகோதரர்களுக்காக உதவிக்கரம் நீட்ட முன்வாருங்கள். உங்கள் பணங்களை எமது வங்கிக்கணக்கில் வைப்பிலிட்டு அல்லது உங்களது பிரதேச JMA உறுப்பினரிடம் கொடுத்து உங்கள் மறுமைக்குரிய வைப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எல்லாம் வல்ல நாயன் உங்களது நன்கொடைகளை பொறுந்திக்கொள்வானாக. ஆமீன்.
Bank: Lloyds bank
Branch: Kentish Town
Account No: 00980043
Sort Code. : 30-94-66
Reference. : FLOOD 2021
Wassalaam,
JMA TEAM.