Ramadan 2022 Iftar Appeal

அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பார்ந்த இஸ்லாமிய உறவுகளே!!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் நாம் அனைவரும் மற்றுமொரு புனித ரமழான் மாதத்தை அடையவிருக்கின்றோம். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!இதனடிப்படையில் வழமை போன்று Jaffna Muslim Association இந்த ஆண்டும் தமது தொண்டு சேவையை முன்னெடுக்க உள்ளது. 

தற்சமயம் இலங்கையில் தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலை யாவரும் அறிந்ததே. நமது இரத்த சொந்தங்கள் மாபெரும் பாரிய பொருளாதார   நெருக்கடிகளினால்  தங்களது இயல்பு வாழ்க்கைக்கே மிகுந்த சிரமங்களை அனுபவிக்கின்றனர். அதனுடன் சேர்ந்து சங்கையான ரமழானையும் அவர்கள்  வரவேற்க இருப்பதனால் மக்களின் சவால்களை கருத்திற்கொண்டு நம் சொந்தங்கள் செறிந்து வாழும் பல பிரதேசங்களை சேர்ந்த பள்ளிவாசல் நிர்வாகங்களும் அவர்களது மஹல்லாவாசிகளிகளை போசிப்பதற்காக எங்களிடம் நோன்புகளை திறப்பதற்கான இப்தார் வசதிகள் உள்ளிட்ட  பல கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு அவசர வேண்டுகோள்களை முன் வைத்துள்ளனர்.

கருணையுள்ளம் கொண்ட கண்ணியவான்களே…!
நமது உறவுகளுக்கு உதவிட நேசக்கரம் நீட்டுங்கள். _ரமழான்_ காலங்களில் அதிகதிகமாக தான தர்மங்களை கூட்டி நன்மைகளை பல மடங்குகளாக்குங்கள். *ரமழான்* என்ற பெயருக்குள் ஒழிந்திருக்கும் மற்றுமொரு *அர்த்தம்* எரித்தல் என்பதாகும். ஆகையினால் இப்புனித மாதம் நன்மைகளை மாத்திரம் இரட்டிப்பாக்குவதோடு நின்றுவிடாது  உங்களுடைய பாவங்களையும் பொசுக்கி விடுகின்றது. 

இதன் நிமித்தம் பல மஸ்ஜிதுகளின் வெவ்வேறான இப்தார் செலவினங்களை கருத்தினில் கொண்டு உதவிகளை வழங்கிட ஒரு நாளைக்கு  அண்ணளவாக *£25* தலா ஒருவருக்கான தொகையாக வரையறுக்கப்பட்டுள்ளது. உங்களால் இயன்றளவு கீழ் குறிப்பிட்டவங்கி இலக்கத்திற்கு   நன்கொடைகளை வழங்குங்கள்.

Bank Details:
Bank     : Lloyds bank
Branch : Kentish Town
A/C No : 00980043
Sort Code : 30 – 94 – 66
*Ref : “Ifthar Appeal 2022”*

BIC: LOYDGB21484
IBAN: GB22 LOYD 3094 6600 9800 43

JMA UK Sri Lankan Bank Details:
M.M.M.KAIS
A/C NO: 047020004451
HATTON NATIONAL BANK
BIYAGAMA BRANCH

Contact Details:
E-mail: jmauk@ymail.com
Website: https://jaffnamuslimuk.org
Facebook: https://m.facebook.com/JaffnaMuslimAssociationUK/

*எம்பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்,
والصدقة تطفىء الخطيئة 
كما تطفىء الماء النار
“நீர், நெருப்பை அணைப்பது போல, தர்மம் செய்யும் கரங்கள் பாவங்களை அழிக்கின்றன.”(புஹாரி)*

ஆகையினால் தாராள மனம் படைத்த தயாள உள்ளங்களே, இன்னலினால் துயருறும் நம் சகோதரர்களின் நெருக்கடியான நிலைமைகளை கருத்தினில் கொண்டு , பலரது பசிகளை போக்கி நோன்புகளை இலகுவாக நோற்பதற்கான வழிகளை உருவாக்க வாரி வழங்க முன் வாருங்கள் என மன்றாடி கேட்டுக்கொள்வதோடு உங்களது ஸக்காத், ஸதக்கா மற்றும் ஸகாத்தில் பித்ரா என்பனவற்றையும் முன்கூட்டியே அதற்குரிய ref களுடன் வைப்பிலிடும் பட்சத்தில் கால தாமதமின்றி அவைகளை உரியவர்களிடம் கொண்டு செல்ல இலகுவாக அமையும். 
வஸ்ஸலாம்.

JMA – Uk Team

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *