
JEvent Report
Distribution of Assistance for Disability Project
Date: Sunday, April 27, 2025
Time: 4:00 PM – 6:00 PM
Venue: Wisdom College, Lazarus Street, Periyamulla, Negombo
A special event was held on Sunday, April 27, 2025, from 4:00 PM to 6:00 PM at Wisdom College, a private educational institution located on Lazarus Street in Periyamulla, Negombo. The purpose of the event was to distribute financial assistance in a dignified manner under a Disability Project initiative.
A total of 12 families from the regions of Jaffna, Periyamulla, Palagaturai, and Kamachodai participated in the event, with both children and adults in attendance. Donations amounting to approximately Rs. 956,000.00 were distributed, providing essential support to those in need and honoring the recipients.
Chief Guests & Special Invitees:
Mr. Ajmal – Chairman
Mr. Rameez – Lawyer
Mr. Siraj – Manager, Wisdom College
Mr. Ramshan – Chartered Accountant
Mr. Jinus – Grama Servahar
Mr. Swiss Ameer – Social Worker
Mr. Saleem – Social Worker
Alhaj Farook – Justice of Peace
Mr. Subuhan – Social Worker
Mr. Nawas – Social Worker
Mr. Safeer – Owner, New Class Line
In total, over 60 well-wishers and community members attended the event, offering their heartfelt congratulations and prayers. Their warm presence and generous spirit added grace and meaning to the proceedings.
Special appreciation was extended to the JMA Organisation for organizing and coordinating the event seamlessly.
The evening concluded with light refreshments served to all attendees.
நிகழ்வு அறிக்கை
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை வழங்கும் நிகழ்வு
தேதி: ஞாயிற்றுக்கிழமை, 27 ஏப்ரல் 2025
நேரம்: மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை
இடம்: விஸ்டம் கல்லூரி, லாஸரஸ் வீதி, பெரியமுல்லை, நீர்கொழும்பு
2025 ஏப்ரல் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை, நீர்கொழும்பு பெரியமுல்லை லாஸரஸ் வீதியில் செயல்பட்டு வரும் விஸ்டம் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகைகள்மதிப்புடன் வழங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம், பெரியமுல்லை, பலகத்துறை மற்றும் காமச்சோடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 12 குடும்பங்களைச் சேர்ந்த சிறார்கள் மற்றும் பெரியவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மொத்தம் ரூ. 956,000.00 மதிப்புள்ள நன்கொடை தொகைகள் பெறுநர்களுக்கு மதிப்புடன் வழங்கப்பட்டன.
முக்கிய விருந்தினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள்:
அஜ்மல் சேர் – தலைமை
ரமீஸ் – வழக்கறிஞர்
சிறாஜ் – முகாமையாளர், விஸ்டம் கல்லூரி
ரம்ஷான் – சார்ட்டட் கணக்காளர்
ஜினூஸ் – கிராம சேவகர்
ஸ்விஸ் அமீர் – சமூக சேவையாளர்
சலீம் – சமூக சேவையாளர்
அல்ஹாஜ் பாரூக் – சமாதான நீதவான்
சுபுஹான் – சமூக சேவையாளர்
நவாஸ் – சமூக சேவையாளர்
சபீர் – நியூ கிளாஸ் லைன் உரிமையாளர்
மேலும் 60க்கும் மேற்பட்ட நல்லுள்ளங்கள் கலந்து கொண்டு, தங்கள் வாழ்த்துகளையும் துஆக்களையும் பகிர்ந்ததோடு நிகழ்வை சிறப்பித்தனர். இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த JMA அமைப்பிற்கு அனைவரும் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
நிகழ்வு சிற்றுண்டி வழங்கலுடன் இனிமையாக முடிவடைந்தது.














