ஐக்கிய இராச்சியதிலே வாழ்ந்து கொண்டிருக்கும் யாழ் முஸ்லிம் மக்களின் ஏக பிரதிநிதிகளான,
JAFFNA MUSLIM ASSOCIATION-UK இனரின் அறிக்கை!
அஸ்ஸலாமு அலைக்கும்!
நாம், சென்ற 30/SEP/16 அன்றும், 04,05/OCT/16 ஆகிய தினங்களிலும், WHATSAPP ஒலிப்பதிவுகளின் மூலமாக வெளியிட்ட அறிக்கைகளின் தொடர் அறிக்கை!
நாம், உலகெங்கிலும் வாழும் யாழ் முஸ்லிம் மக்களை உள்ளடக்கிய சர்வதேச சபை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக கூறியிருந்தோம்.
அது தொடர்பான எமது தற்போதய நிலைப்பாடுகள்.!
அன்பு உறவுகளே!
யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் உள்ளடங்கிய, வடமாகாண முஸ்லிம் மக்களின் முறையான, துரிதப்படுத்தப்பட்ட மீள்குடியேற்றம், இலங்கை மக்களின் மனித உரிமைப் பிரச்சினைகள் போன்றவற்றை, சர்வதேச அரங்கங்களுக்கு எடுத்துச் செல்லவும். ராஜிய அதிகாரிகளோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும். இலங்கை அரசோடும், வடமாகாண சபையோடும், புலம்பெயர் தமிழர் அமைப்புகளோடும், கலந்துரையடல்களில் ஈடுபட்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும். யாழ் முஸ்லிம் மக்கள் சர்வதேச சபை ஒன்றை உருவாக்குவது தொடர்பாக, எமது 02,03,04/SEP/16 FRANCE விஜயத்தின் போது, அந்நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய ஒரு சில யாழ் முஸ்லிம் சகோதரர்களோடு, கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தோம்.
அந்த கலந்துரையாடல்களில், பிரதானமாக, பூர்வங்கமாக, இணக்கம் காணப்பட்ட விடயங்கள் பின்வருமாறு,
யாழ் முஸ்லிம்களின் சர்வதேச சபை, மீள்குடியேற்றம், அடிப்படை மனித உரிமைகள் தொடர்பாக மட்டுமே கவனம் செலுத்தும்.
இந்த அமைப்புக்கு, தலைவர், என்று ஒருவர் இருக்க மாட்டார். பிரதான ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் ஒருவர் செயற்படுவார்.
எல்லா உறுப்பினர்களும் சம அந்தஸ்த்தோடு ஆலோசனை சபை உறுப்பினர்களாக அங்கத்துவம் வகிப்போம்.
ஒவ்வொரு செயற்பாடுகளும், அந்தந்த் நாட்டுச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, அவரவர் வசதி வாய்ப்புகளுக்கு தகுந்த முறையில், ஓர் ஒருங்கிணைப்பாளரினால் முன்னெடுக்கப்படும்.
இந்த அமைப்பு, ஏற்கனவே ஒவ்வொரு நாடுகளிலும் இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய, சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கக் கூடிய, எமது சமூகம் சார்ந்த அமைப்புக்களின் செயற்பாடுகளில் தலையிடாது.
இலங்கை நாட்டில், தேர்தல் அரசியலில் ஈடுபடக் கூடிய எந்த அரசியல் கட்சிகளின் பக்க சார்புடனோ அல்லது பின்புலத்துடனோ இயங்காது.
இந்த அமைப்புக்கு, JAFFNA MUSLIM COMMUNITY-INTERNATIONAL. எனப் பெயரிட உத்தேசிக்கப்படுகிறது.
-என்பனவாகும்.
உடன்பாடு காணப்பட்ட பிரதானமன விடயங்களின் நோக்கங்கள்…..
ஒவ்வொரு நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய யாழ் முஸ்லிம் மக்களின் தனித்துவங்கள் மதிக்கப்பட வேண்டும்.
எல்லோருக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட வேண்டும்.
பணம், பட்டம், பதவி,அதிகார பலம், தொழில்நுட்ப வசதிகள், என்பவற்றைக் கொண்டு யாரும், எவருடைய கருத்துக்களையும், ஆளுமைகளையும், பின்னுக்குத் தள்ளவோ, புறந்தள்ளவோ கூடாது.
எல்லோரும் ஒரே தளத்தில் நின்று எமது சமூகத்திற்காக உழைக்க வேண்டும்.
-என்பதாக இருந்தது.
ஆனால், துரதிருஸ்டவசமாக, பரீஸ் நகரிலே வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய, எமது ஊரைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள், எம்மோடு கலந்து ஆலோசிக்காமல், எமக்கு ஒரு சிறிய தகவல் கூடத்தராமல், இந்த அமைப்பை,
“JAFFNA MUSLIM COMMUNITY-INTERNATIONAL”(JMC-
என்ற பெயரிலே, அவசர அவசரமாகப் பதிவு செய்துள்ளார்கள்.
“ஏன் இந்த அவசரம்?” என்று வினவிய போது, ‘பாதுகாப்புக் காரணங்களுக்காக, சட்ட அந்தஸ்த்து தேடிக்கொண்டதாக’, பூசி மெழுகிய ஒரு நியாயத்தை ஒப்புவித்தனர். நியாயங்கள் எப்படி இருந்த போதிலும், எமக்குத் தெரியப்படுத்தாமல், அதை நடைமுறைப்படுத்திய விதம் எமக்கு திருப்திகரமாக இருந்திருக்கவில்லை. என்றாலும் ஒரு நல்ல காரியம் நடக்கட்டுமே என்கிற பரந்த மனநிலையோடு பதிவு விடயத்தைப் பொறுத்துக் கொண்டோம்.
ஆனால் அடுத்தடுத்து நிகழ்ந்த அவர்களுடைய செயற்பாடுகள், எம்மைத் தீவிரமாக சிந்திக்க வைத்தன. கவலைகளோடு கூடிய எமது சிந்தனைகள், சில முடிவுகளுக்கு எம்மை இட்டுச் சென்றுள்ளன. அவை….
உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளும் விடயத்தில் எமது ஆலோசனைகளை மதிக்காமல், தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டதினாலும்,
அறிக்கைகள் விடும் போது, எமது கருத்துக்களையும், ஆலோசனைகளையும், உள்வாங்கிக் கொள்ளாமல், தமது மனம்போன போக்கில் தமது இச்சைப்படி செயற்பட்டதினாலும்,
தலைவர், செயலாளர், பொருளாளர், என்கிற பதவி நிலைகளின் மூலம், அமைப்பையும், அதன் அதிகாரத்தையும் தமது கைகளுக்குள் வைத்திருப்பதற்காக, இந்த அமைப்பை, உறுப்பினர்களின் சம்மதம் பெறாமல், பிரான்ஸ் நாட்டிலே பதிவு செய்ததினாலும்,
பிரதானமாக இணக்கம் காணப்பட்ட மனித உரிமைச் செயற்பாடுகள் மட்டும் என்கிற நிலையிலிருந்து திசைமாறி பயணிக்க முடிவு எடுத்திருப்பதினாலும்,
ஏற்கனவே, பதினான்கு வருடங்களாக, யாழ் முஸ்லிம் மக்களுக்கும், இலங்கை மக்களுக்கும், மகத்தான பல சேவைகளை, தன்னலம் பாராது, அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு ஆற்றி வரும்,
JAFFNA MUSLIM ASSOCIATION-UK அமைப்பை ஓரங்கட்டி, அழித்தொழிக்கும் எண்ணத்தோடு செயற்படத் தலைப்பட்டதினாலும்,
JMA-UK இனராகிய நாம், JMC-I என்கிற உத்தேச அமைப்பின் உருவாக்கத்திலிருந்தும், அதன் செயற்பாடுகளிலிருந்தும், முற்று முழுதாக விலகிக் கொள்கிறோம்.
ஆனாலும் நாம் நன்நோக்கோடு ஆரம்பித்த, யாழ் முஸ்லிம் சமூகத்தின் சர்வதேச சபையை அமைக்கும் எமது முயற்சிகள் தொடரும். இன்ஸா அல்லாஹ்!
இதற்காக, எமது சமூகத்தைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், அறிஞர்கள், பொதுமக்கள், என பல தரப்பினர்களோடும் தொடர்புகளை ஏற்படுத்தி, பிரச்சினைகளின் உண்மைத் தன்மைகளுக்கு ஏற்ப நடுநிலையோடும், வெளிப்படைத் தன்மையோடும் செயற்படுவோம்.
நாம் இத்தனை காலங்களாக, வெற்றிகரமாக செயற்படுத்தும், மனிதாபிமானப் பணிகளோடு சேர்த்து, இனி வரும் காலங்களில் மீள்குடியேற்றம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களிலும் கவனம் செலுத்தி, அர்ப்பணிப்போடு செயற்ட உறுதி பூண்டுள்ளோம். என்பதை நம்பிக்கையோடு கூறிக் கொள்கிறோம். இன்ஸா அல்லாஹ்.
பிற்குறிப்பு;-நாம் எப்போதும் தனிமனித விமர்சனங்களில் இறங்கியது இல்லை. இறங்கப்போவதும் இல்லை.
எந்தவொரு செயற்பாடுகளையும் கருத்துரீதியாகவே எதிர்கொள்கிறோம். இனியும் அப்படித்தான் செயற்படுவோம்.
எமது சமூக நலன்களுக்காக, யாருடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவும், அன்புகாட்டி அரவணைத்துச் செல்லவும் தயாராக இருக்கிறோம்.