யாழ்ப்பணத்தில் யாழ் முஸ்லிம்களின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஏற்பாடு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துகு *யாழ்ப்பணத்தில் யாழ் முஸ்லிம்களின்* *மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஏற்பாடு* முஸ்லீம்களின் மீள்குடியேற்றத்துக்கு புத்துணர்வு அளிக்கும் நோக்குடன் ஜக்கிய இராச்சிய யாழ். முஸ்லிம் அமைப்பு(JMA) , யாழ்ப்பாண முஸ்லிம்களின் மாபெரும் ஒன்றுகூடல் ஒன்றை  இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 2017 யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு  செய்துள்ளது. 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் ஏழாம் திகதி வரை யாழ்ப்பணத்தில் இடம்பெற உள்ள இந்த மாபெரும் நிகழ்வில் மீள் குடியேற்ற சம்பந்தமான கலந்துரையாடல்கள் ,இஸ்லாமிய நிகழ்ச்சிகள் ,மரபு ரீதியான யாழ். விளையாட்டு நிகழ்ச்சிகள் , உதைப்பந்தாட்ட போட்டிகள் , சிறுவர்களுக்கான விதவிதமான நிகழ்ச்சிகள் , உணவு நிகழ்ச்சிகள் மற்றும் இன்னோரன்ன நிகழ்ச்சிகள் ஆகியன இந்த ஒன்று கூடலில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன . இந்த மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வின் போது மருத்துவ முகாம் மற்றும் பிற சமுக சேவைகளும் ஏற்பாடு செய்யபட்டுள்ளன. முதலாம் திகதி ஆரம்பமாகும் வெளியக நிகழ்ச்சிகள் செவ்வாய்   முதல்   திங்கள் அன்று (வங்கி விடுமுறை தினத்தன்று ) முழுவதும்  நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் மாத்திரமன்றி உலகம் முழுவதும் பரந்து வாழும்  யாழ்ப்பாண முஸ்லிம்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி உங்கள் உறவினர்கள் , நண்பர்கள் ஆகியோரை மாத்திரமன்றி புதிய தலைமுறையினரையும் சந்திக்கும் ஒரு களமாகவும் வாய்ப்பாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது யாழ்ப்பாண முஸ்லிம்களின் தடைப்பட்டுள்ள மீள்குடியேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு  முஸ்லீம்களை யாழ் முஸ்லீம் அமைப்பு அன்பாக வேண்டுகோள் விடுக்கிறது சிறுவர் நிகழ்ச்சிகள் , பிற மேடை  நிகழ்ச்சிகள் விளையாட்டு மற்றும் உதைப்பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புவோர் அமைப்பின் கீழுள்ள விலாசங்களிலோ அல்லது அமைப்பின் அங்கத்தவர்களை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் . இது சம்பந்தமான மேலதிக விபரங்களை பின்வரும்  தொடர்பு சாதனங்கள் மூலம் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும். Email – Jmauk@ymail.com Facebook – Jaffna Muslims Association UK